ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டு செல்லும் ஆவணங்கள்!

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் 6–ந்தேதி தொடங்குகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு இந்தியா முழுவதும் புதிதாக ஆசிரியர் பணியில் சேர்வதற்கு அவர்கள் பி.எட்.படித்திருந்தாலும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் அந்தந்த மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது.