மருத்துவ குணங்கள் கொண்ட தாய்ப்பால்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை நிபுணர்கள் இப்போது தெரிவிக்கிறார்கள். தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்களுக்கு மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது.தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்கள், கருவில் உள்ள செல்களைப் போன்று உள்ளன.