கன்னடத்தில் கரை சேரும் களவாணி நாயகி

களவாணி படத்தில், விமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஓவியா. படம் வெற்றி பெற்றபோதும், ஓவியாவுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. கமல் நடித்த, "மன்மதன் அம்பு படத்தில், ஒரு சிறிய வேடத்தில் தலை காட்டினார். "மெரினா, கலகலப்பு போன்ற சில படங்களில் நடித்தபோதும், தன் நடிப்பை ஓகோவென பாராட்டும் அளவுக்கு, வாய்ப்புகள் கிடைக்காததில், அவருக்கு சற்று ஏமாற்றமே.தற்போது," சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட, ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.