"பட்டனை தொட்டால் போதும்' உங்கள் தளம் ?
இண்டர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன். இமெயிலா அதற்கு ஒரு பட்டன். பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன். டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன். எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும் பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம். இண்டர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக் கூடும். இணையத்தில் உலா வர பிரவுசர் இருக்கிறது. அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்கிங் வசதியும் உள்ளது. ஒரு சில பிரவுசர்களில் நாம் தினந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றி விடும். அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த பட்டன்கள் என்று நினைக்கக் கூடும். இண்டர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும். ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை. இந்...