சனியின் துணை கிரகத்தில் கடல் - புதிய தகவல்

சனி கிரகத்தில் 3 துணை கிரகங்கள் (சந்திரன்) உள்ளன. அவற்றில் டைட்டான் என்ற துணை கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு ஹைஜீன் என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.