இன்று ஆறாம் பிறந்த நாளை கொண்டாடும் ட்விட்டர்!

கருத்து பரிமாறல்களில் ஒரு பெரிய சுதந்திரத்தை ஏற்படுத்திய ட்விட்டர் இன்று 6-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ட்விட்டர் மார்ச் 21-ஆம் தேதி 2006 ஆண்டு வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே அதிகமான கருத்து பரிமாறல்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த உண்மையை பொய்பித்துவிட்டது ட்விட்டர்.