வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?

வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன். Web Hosting என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும்.