சுதந்திர தின விழாவில் வித்யா பாலன்

அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூயார்க் இந்தியன் அசோசியன் என்ற அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரமாண்ட விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள், கலர்புல் அணிவகுப்பையும் நடத்துவர். இந்த அணிவகுப்பில் இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களும் பங்கேற்பர். இந்தாண்டு நடக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கு, பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.