விஸ்வரூபம் படத்தின் தடை நீங்கியது - தமிழகம் முழுவதும் திரையிட உயர்நீதிமன்றம் அனுமதி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட