முக அழகைப் பாதிக்கும் கருவளையம்
உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை "மீன் விழியாள்" என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை "வேல் விழியாள்" என்றும் சொல்வார்கள். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்ல வரவில்லை. அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை தான் சொல்ல வருகிறேன். கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையேக் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது. சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்பு...