இடுகைகள்

ஏப்ரல் 3, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் பெயர்கள் (5000) (Tamil Names 5000)

படம்
ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறை...

பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)

வ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் 1 டிரேடரஸ்   வணிக மையம் 2 கார்ப்பரேஷன்    நிறுவனம் 3 ஏஜென்சி    முகவாண்மை 4 சென்டர்    மையம், நிலையம் 5 எம்போரியம்    விற்பனையகம் 6 ஸ்டோரஸ்   பண்டகசாலை 7 ஷாப்    கடை, அங்காடி 8 அண்கோ    குழுமம் 9 ஷோரூம்    காட்சியகம், எழிலங்காடி 10 ஜெனரல் ஸ்டோரஸ்   பல்பொருள் அங்காடி 11 டிராவல் ஏஜென்சி    சுற்றுலா முகவாண்மையகம் 12 டிராவலஸ்   போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 13 எலக்டிரிகலஸ்   மின்பொருள் பண்டகசாலை 14 ரிப்பேரிங் சென்டர்    சீர்செய் நிலையம் 15 ஒர்க் ஷாப்    பட்டறை, பணிமனை 16 ஜூவல்லரஸ்   நகை மாளிகை, நகையகம் 17 டிம்பரஸ்   மரக்கடை 18 பிரிண்டரஸ்   அச்சகம் 19 பவர் பிரிண்டரஸ்   மின் அச்சகம் 20 ஆப்செட் பிரிண்டரஸ்  மறுதோன்றி அச்சகம் 21 லித்தோஸ்   வண்ண அச்சகம் 22 கூ...

பெண் பெயர்கள் (Girl's Names)

அ 2771. அகல்விழி    2810. அருள்மொழித்தேவி2849. அழகுதெய்வாணை 2772. அகநகை    2811. அருளரசி    2850. அழகுநங்கை 2773. அகமுடைநங்கை    2812. அருளம்மை    2851. அழகியபெரியவள் 2774. அகவழகி    2813. அருளம்மா    2852. அறம் 2775. அங்கயற்கண்ணி    2814. அருள்    2853. அறம் வளர்த்தாள் 2776. அஞ்சம்மாள்    2815. அருள்விழி    2854. அறம் வளர்த்த நாயகி 2777. அஞ்சலை    2816. அருள்மங்கை    2855. அறச்செல்வி 2778. அஞ்சளையம்மா    2817. அருள்மணி    2856. அறப்பாவை 2779. அஞ்சொலி    2818. அருள்நெறி    2857. அறவல்லி 2780. அடைக்கலம்    2819. அருள்வடிவு    2858. அறிவுக்கரசி 2781. அணிசடை    2820. அருட்கொடி    2859. அறிவுக்கனி 2782. அணிமாலை    2821. அருளழகி    2860. அறிவுச்சுடர...

ஆண் பெயர்கள் (Boy's Names)

அ 1. அகரன்        84. அரிசில்கிழான்    167. அழகுமலை 2. அகரமுதல்வன்         85. அரியநாயகம்    168. அழகு திருமலை 3. அகத்தியன்    86. அரியபிள்ளை    169. அழகுநம்பி 4. அகவழகன்    87. அரியமணி    170. அழகுமுத்து 5. அகமுடைநம்பி    88. அரியமுத்து    171. அழகு முத்துக்கோன் 6. அஞ்சி        89. அரிமா        172. அழகுவேல் 7. அஞ்சாநெஞ்சன்    90. அரிமாகோ    173. அழகுவேள் 8. அஞ்சனவண்ணன்    91. அரிமாச்செல்வன்    174. அளப்பருங்கடலான் 9. அஞ்சனமழகியபிள்ளை    92. அரிமாப்பாண்டியன்    175. அளப்பருந்தேவன்

சாதனை நூலகம்!

படம்
 பயன்படாத ரயில் நிலையம் ஏதாவது இருந்தால், அது, நம்ம ஊரில் பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறி இருக்கும். ஆனால், இங்கிலாந்தில் இப்படியொரு ரயில் நிலையம், இன்று, வித்தியாசமாய் சாதனை படைத்து வருகிறது. இங்கிலாந்தில் நார்தம்பர்லாந்து என்ற பகுதியில், விக்டோரியா ஆலன்விக் என்ற ரயில் நிலையம் ஒன்று இருந்தது. வில்லியம் பெல் என்பவரால், 1887ல் வடிவமைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், 1968ல் மூடப்பட்டது. “பார்ட்டர் புக்ஸ்’ என்ற நிறுவனம், 1991ல், இங்கு, ஒரு செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடையை துவக்கியது.இன்று, இந்த புத்தகக் கடையில், 3 லட்சத்து, 50 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. எல்லாமே, செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்தான். ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் உள்ள ஹால், ரயில்வே பிளாட்பாரம், பெண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, ஆண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, பார்சல் ஆபிஸ் என மொத்தம், ஏழு அறைகள் புத்தகங்களால் நிரப்பப்பட்டுள்ளன.

மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு இந்தியர்கள் என்கிறபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்கிற கணிப்பு, உணவு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அச்சத்தை உருவாக்குகிறது.மக்கள் தொகை அதிகரிப்பு 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 21.54 விழுக்காடாக இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த வேகம் குறைந்துள்ளது. 17.64 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதாவது 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 6 விழுக்காடுதான் தமிழக மக்க...

உங்கள் கணினி நீங்கள் எழுதுவதை சொல்ல சொந்தமாக program எழுதுங்கள்

படம்
மிக சுலபம். நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை. இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள். 1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள். 2. கீழ் உள்ள codeயை அப்படியே copy செய்து notepadல் paste செய்யவும்.

யாஹூவின் கல்வித்தளம்

யாஹூ இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு புதிய வசதிகளை நாளுக்கு நாள் தனது வலைத்தளத்தில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கல்வி குறித்த தளத்தை நேர்த்தியாக வடிவமைதிருக்கிறது. இந்தியாவில் உள்ள கல்லூரிகள் அவற்றில் உள்ள படிப்புகள், கல்லூரிகளில் நடைபெரும் தேர்வுகள் போன்றவை இந்த தளத்தின் மூலம் எளிதில் தகவல்களை பெற இயலும். கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அறிந்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ளும் வசதியினையும் ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் மாணவர்களுக்கு இது பயனுள்ள தளமாய் அமையும்.

இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

உத்திரப் பிரதேசம்  மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம். அருணாச்சலப்பிரதேசம்  வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம். அசாம் இந்தியாவின் தேயிலைத் தோட்டம். ஆந்திரப் பிரதேசம் புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம். முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கர்நாடகம்  நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.  காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது. சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.

எபிக் ஒரு இந்திய உலவி

படம்
  எபிக் ஒரு இந்திய உலவி இந்தியாவிற்கென ஒரு தனி சிறப்பினை ஏற்படுத்துவது நம் இந்தியர்களின் வழக்கமாகிவிட்டது. இந்திய கணினி வல்லுனர்கள் கணினி உலகில் ஒட்டு மொத்த சாதனைகளை படைத்துவருகின்றனர் என்பது நாமறிந்த ஒன்றே. அந்த வகையில் பெங்களுரை சார்ந்த கணினி வல்லுனர்கள் இந்தியாவிற்காக உலக நாடுகள் யாதும் சிந்திக்காத வகையில் தனி உலவியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். Chorme மற்றும் Internet Explorer மற்றும் பல முன்னணி உலாவிகளை விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவச ஆண்ட்டி வைரஸ், விருப்பதிற்கேற்ப தொரினை மாற்றி கொள்ளும் வசதி, வீடியோ, தொலைக்காட்சி போன்றவைகளை எளிமையான முறையில் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு

> சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர். > சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது? ஹேக்கல். > கங்காரூ அதிகம் உள்ள நாடு? ஆஸ்திரேலியா. > கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது? முதலை. > ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன? ஹீவியா ப்ரசிலியன்சிஸ். > மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது? கிழாநெல்லி. > வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? கி பி 1890. > உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூன் 5. > இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்? சூரியகாந்தி எண்ணெய். > தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது? ஆக்ஸிஜன்.    > சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?                    டி. பி. ராய்.