யாகூ பயணாளர்களின் ரகசிய குறியீடுகள் திருடப்பட்டது!

இணைய தளங்களை பயன்படுத்துபவர்களின் ரகசிய குறியீடுகளை (பாஸ் வேர்டுகள்) திருடி அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரபலமான 'யாகூ' இணைய தளத்தில் 4 லட்சத்து 53 ஆயிரம் பேரின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) திருடப்பட்டுள்ளன. இது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி நடந்தது? யார் திருடினார்கள் என்று தெரியவில்லை