சந்தானத்தை விழி பிதுங்க வைத்த தாய்க்குலம்!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசினார் நகைச்சுவை நடிகர் சந்தானம். விமல் - நிஷா அகர்வால் நடித்துள்ள இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் சந்தானம். வழக்கம்போல, இந்த நிகழ்ச்சியிலும் நாலு வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார் ஹீரோ விமல். ஆனால் சந்தானம் அரைமணி நேரம் பேசுவார் என பிஆர்ஓ மவுனம் ரவி அறிவிக்க, சிரித்த படி வந்த சந்தானம் சீரியஸாகவே சற்று அதிக நேரம் பேசினார்.