ஆயுளுக்கு ஆப்படிக்கும் உடல் பருமன்!

நீங்கள் தின்பண்டங்களுக்கு அடிமையானவரா? உங்களின் உடல் எடை அதிகரித்தால் ஆயுளும் 10 ஆண்டுகளுக்கு மேல் குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில், உடல் பருமன் என்பது புகைபிடித்தலை விட அதிக பாதிப்பைத் தருகிறது.