ஆடவர்களுடன் லட்சுமி ராயின் அனுபவங்கள்

இதுவரை தான் சந்தித்த ஆண்களில் பெரும்பாலும் நல்லவர்களே அதிகம். சிலர்தான் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள், என லட்சுமி ராய் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நிருபர்களிடம் பேசிய லட்சுமி ராய், "தென் மாநிலங்களில் ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவுக்கு நானும் ஒரு பிரபல நடிகையாக இருப்பதில் சந்தோஷமாக உள்ளது. முதலில் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இப்போதைய என் ஆசை. அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்கள். முதலில் சினிமா... அதன்பிறகு மற்றதையெல்லாம் பார்க்கலாம்.