விஸ்வரூபத்தில் பல கோடிகளை சம்பளமாக வாங்கிய கமலஹாசன்

விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.