மனசை கவரும் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் குஷ்பு!

அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டதால் சினிமாவில் நடிக்க நேரமில்லையாம் குஷ்புவிற்கு. இப்பொழுதும் நல்ல கதாபாத்திரத்திடன் தமிழ் இயக்குநர்கள் சென்றாலும் நோ சொல்லி அனுப்பிவிடுகிறார். கிட்டத்தட்ட சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் என்றே கூறலாம். ஆனால் சின்னத்திரையில் நடிப்பதை மட்டும் நிறுத்தமாட்டாராம் குஷ்பு காரணம் கேட்டால், 'அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை'