கமலை பொறுமையாக இருக்கும்படி ரஜினி வேண்டுகோள்

விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார் கமல். சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியும் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.