ஜனவரி மாத ராசி பலன்கள் - 2013

மேஷம் : அரசு வேலை கிடைக்கும் யோகம் காணப்படுகிறது. அதிகார பதவிக்கும் வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். அறிவுத் தெளிவோடு பாடங்களைப் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் பெறும் வழியுண்டு. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடவேண்டியது அவசியமாகிறது. கீழே விழுந்து காயம் ஏற்படலாம்.