முட்டை சைவமா? அசைவமா? அது அந்தக்காலம்!
முட்டை சைவமா? அசைவமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்றைக்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்து வருகிறது. முட்டையில் உள்ள சத்துக்களே இதற்கு காரணமாகும். முட்டையில் வைட்டமின்கள், புரதம், கொழுப்புச்சத்து முதலானவை அளவாக அமைந்துள்ளன. முட்டையில் உள்ள புரதசத்தில் மனித உடலுக்குள் தேவையான புரதக்கூறுகள் சமச்சீர் அளவில் அமைந்துள்ளன.Image எனவே வெள்ளைக்கரு புரதம் என்றும் முட்டைபுரதம் என்றும் இருவகைப்படும் புரதங்கள் முட்டையில் உண்டு. இதில் வெள்ளைக்கரு புரதம்தான் மிகச்சிறந்த புரதமாகும். இதில் கந்தகம் கலந்த புரதக்கூறுகள் அதிகம். இப்புரதம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. பருப்பு, பால், இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட முட்டைபுரதம் மிகுந்ததாகும். மனித உடலில் புது திசுக்கள் வளரவும், தேய்ந்துபோன திசுக்கள் வளரவும் என்சைம், ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. முட்டையில் 11 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து அனைத்தும் முட்டையில் மஞ்சள் கருவில் இருக்கிறது. இது எளிதில் ஜீரணிக்ககூடியது. முட்டையில் 0.63கிராம் லிந்தெலியிக் என்னும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலு...