விஸ்வரூபம் 2 - திரைக்கு வரும் முன்னே படப்பிடிப்பு துவங்கியது

மேலும் படங்கள் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உடனடியாகத் தொடங்கும் என கமல் தெரிவித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் பிவிபி சினிமாவும், ராஜ் கமல் இண்டர்நேஷனலும் இணைந்து விஸ்வரூபத்தை தயாரித்துள்ளன. மே 1 படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி எம். ஆஸ்போர்ன் விஸ்வரூபத்தை பார்க்கும் ஆர்வத்தை தெரிவித்துள்ளார்.