இடுகைகள்

மார்ச் 31, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜிமெயில் BACKUP எடுக்கும் மென்பொருள்!

படம்
அண்மையில் ஜிமெயில் பயனா்களில் ஏறத்தாள 150,000 பேரின் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டும் அவா்களின் கணக்கு முடக்கப்பட்டும் இருந்தது. இதற்கு காரணம் ஜிமெயிலில் ஏற்பட்ட சிறு குழறுபடி தான். என்ன தான் 7.5GB இற்கு மேற்பட்ட இட அளவை ஜிமெயில் வழங்கினாலும் மேலே சொன்னது போன்ற குழறுபடிகளால் ஜிமெயிலை காப்பு (Backup) எடுக்கவேண்டியது அவசியமாகிறது. முக்கியமான மின்னஞ்சல்களை பாதுகாக்கவேண்டுமெனில் வேறு வழியில்லை. ஆக இந்தப் பதிவில் ஜிமெயிலை காப்பு எடுப்பதற்கென உதவும் மென்பொருள் பற்றியும் அதனைப் பயன்படுத்துவது தொடா்பாகவும் சிறு விளக்கம் தருகிறேன். Gmail Backup முதலில் Gmail Backup மென்பொருளை   தரவிறக்கி நிறுவிக்   கொள்ளுங்கள். நிறுவல் செயல்முறை இலகுவானது. நிறுவியதை திறந்து தேவையான விபரங்களை தட்டச்சு செய்யுங்கள். இங்கு நீங்கள் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், காப்பு எடுக்கவேண்டிய கோப்பு (Backup Folder) மற்றும் எந்தத் திகதியிலிருந்து எந்தத் திகதி வரை காப்பு எடுக்கப்படவேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிடவேண்டும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல்களை முழுமையாக காப்பு எடுக்கவிரும்பினால் ...

நிலநடுக்கம்

படம்
உலகளாவிய நிலநடுக்க உலுக்குமையங்கள்,1963   -   1998 தளத்திட்டுகளின் இடப்பெயர்வு நிலநடுக்கம்   (அல்லது   பூகம்பம் , அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்: earthquake ) என்பது   பூமிக்கடியில்அழுத்தம்   அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு   நிலநடுக்கமானியினால்   ( seismometer )   ரிக்டர் அளவை   மூலம் அளக்கப்படுகிறது. 3   ரிக்டருக்கும்   குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன. கண்டங்கள், துணைக் கண்டங்கள் பூமியின் மேற்பரப்பு ( Lithosphere ) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்துகண்டங்களும்   பசிபிக்   முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தப் பிளேட்ட...