தீபாவளி சரவெடி விஜய் Vs அலெக்ஸ் பாண்டியன்

பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும். ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி யோடு (தலைப்பு உறுதியில்லை) மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன். விஜய் - அஜீத், விஜய் - சூர்யா என்பது போய், இப்போது விஜய் - கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.