எந்திரன் வரிசையில் விஸ்வரூபம் 100 கோடியை அள்ளியது - கமல் அறிவிப்பு

தமிழ் சினிமா விஸ்வரூபம் படம் வசூலில் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டதாக நடிகர் கமல்ஹாஸன் அறிவித்துள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் ரஜினியின் சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்த படமாக விஸ்வரூபம் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் மூன்று மொழிகளிலும் 18 நாட்களில் இந்த வசூலைப் பெற்றுள்ளது