இந்திக்கு மீண்டும் செல்லும் ஸ்ருதி!
கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி, நடிகையாக தயாராக இருக்கிறார் என, தெரிந்ததும், அவரை தமிழில் அறிமுகப்படுத்த, பெரிய போட்டா போட்டியே நடந்தது. ஆனால், "என்ட்ரியே மிரட்டலாக இருக்க வேண்டும் என, நினைத்த அவர், பாலிவுட்டின் மீது பாசம் காட்டி, "லக் என்ற படத்தின் வாயிலாக, சினிமா பிரவேசம் செய்தார் ஸ்ருதி. பின், தெலுங்கு தேசத்திற்குச் சென்ற அவர், "7ம் அறிவு மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்தார்.இந்நிலையில், ஸ்ருதிக்கு மீண்டும், இந்தியில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.