துப்பாக்கி படப்பிடிப்பின் போது காயம் அடைந்த இளைய தளபதி!

துப்பாக்கி படப்பிடிப்பில் நடிகர் விஜய் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் துப்பாக்கியின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார்.