முடி வளர்ச்சியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.