வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீடு உள்ளதா - சுலபமாக அறிய புது வழிகள்

இந்த உலகத்தில் வாழும் எந்த ஒரு மனிதனுக்கும் ஏழை மற்றும் பணக்காரர் வித்தியாசமின்றி வாழ்வதற்கு கண்டிப்பாக ஒரு இருப்பிடம் தேவை. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் கூட உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்று குடியிருக்கும் வீட்டில் தான் முடிகிறது. பொதுவாக குடியிருக்கும் வீடானது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகிய நான்கு மூலங்களை என்றென்றும் பெற்று நலமாக வாழ்வதற்கு உதவும் இடமாகும்.