TreeSize Free - ஹார்ட் டிஸ்க்கின் உபயோக இடத்தை காட்டும் மென்பொருள்

இது மிகவும் பிரபலமான ஒரு புரோகிராம். சில விநாடிகளில், ஹார்ட் டிஸ்க்கில் எந்த ட்ரைவில், எந்த போல்டரில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனக் காட்டும். பார் கிராபிக்ஸ் மூலம் ட்ரைவ்கள் எடுத்துள்ள இடம் காட்டப்படும். போல்டரில் கிளிக் செய்தால், அதே போன்ற வரைபடம் மூலம் இடம் காட்டப்படும். இடம் மட்டுமின்றி, பைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வரைபடம் காட்டும் படி மாற்றி அமைக்கலாம்.