கணவருக்கு கார் பரிசளித்த குஷ்பு!

நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சிக்கு விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகை குஷ்புவும், டைரக்டர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வருகிறார். டைரக்டர் சுந்தர்சி டைரக்ஷனுடன், ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு பிடித்த காரை குஷ்பு பரிசளித்துள்ளார்.