விஸ்வரூபம் பார்ட் 2 கமல் அறிவிப்பு

விஸ்வரூபம் படம் இன்னும் 10நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2-வை எடுக்க போவதாக கமல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பங்களுடன் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.