யானைய கண்டா அலறும் லட்சுமி மேனன்!

கும்கி தான், லட்சுமிமேனனுக்கு முதல் படம். ஆனால், "சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டது. தற்போது, "கும்கியும் வெளியாக தயாராகி விட்டது. கேரளத்துப் பெண்ணாக இருந்தாலும், ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறார் லட்சுமி. தன் படங்களில், சொந்தக் குரலில் பேச வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. ஆனால், பேச்சில் மலையாள வாடை அடிப்பதாகச் சொல்லி, "டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பேச வைக்கின்றனர் இயக்குனர்கள். இதனால், தமிழை அச்சர சுத்தமாகப் பேச, பயிற்சி எடுத்து வருகிறார் நடிகை.