
சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர். சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!