
எம்.கே. எண்டர்பிரைசஸ் மற்றும் நேசிகா திரையரங்கம் சார்பில் எம்.மதிவாணன், ஏ.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’. இதில் சபரிஷ் நாயகனாகவும், சுனைனா நாயகியாகவும் நடிக்கின்றனர். கருணாஸ், தம்பிராமையா, சிங்கம்புலி, ராஜ்கபூர், செல்வபாரதி, வையாபுரி, சூரி, பாவா லட்சுமணன், யோகிதேவராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராசுமதுரவன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
காதல், காமெடி கலந்து குடும்ப சென்டிமெண்டுடன் இப்படம் தயாராகிறது. பெற்றவர்கள் கனவே தங்கள் வாரிசுகள் பெரிய அந்தஸ்து பெறவேண்டும் என்பதுதான் அவர்கள் கனவு. பிள்ளைகளால் சுக்கு நூறாகும்போது அவர்கள் படும் வேதனைகளை தம்பி ராமையா மூலம் பதிவு செய்துள்ளேன். கருணாஸ் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார், இசை : கவி பெரியதம்பி, பாடல்: நந்தலாலா, எடிட்டிங்: சுரேஷ்அர்ஸ், ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், இணை தயாரிப்பு: ஏ.தென்பாண்டியன், மார்க்கெட் கே.முத்து, படப்பிடிப்பு தேனி, திண்டுக்கல், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடக்கிறது.