ராகிங்கை தடுக்க புதிய இணையதளம் துவக்கம்

ராகிங்கால் மாணவர்கள் தொடர்நது பாதிக்கப்படும் நிலையில், அதை தடுக்கும் பொருட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், ராகிங் தடுப்பு இணையதளத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, ராகிங் சம்பவம், மாணவர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன.
ராகிங் என்பது குற்றம் என்று சுப்ரீம் கோர்ட் 2009ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்போது உத்தரவிட்டது. அதன்படி, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மேற்பார்வையின் கீழ் இயங்க உள்ள இந்த இணையதளத்தை, 2009ம் ஆண்டில் இமாச்சல பிரதேச மருத்துவக்கல்லூரியில் நிகழ்ந்த ராகிங்கில் தனது மகனை பறிகொடுத்த அமானின் தந்தை ராஜேந்திர கச்ரோ நிர்வகிக்க உள்ளதாகவும், இந்த இணையதளத்தி்ன் மூலம் பதிவாகும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget