தென்றல் தொடர் வில்லியுடன் கலக்கல் பேட்டி!


தென்றல் தொடரில் புயலான மருமகளாய் வந்து மாமியாரிடம் மல்லுக்கு நிற்கும் சுதாவின் நிஜப் பெயர் பாவ்யகலா. ஆந்திராவில் பிறந்து பெங்களூரில் செட்டில் ஆகியிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் சீரியல்களில் பிஸி நடிகை. தொடரில் வில்லத்தனம் செய்தாலும் நிஜத்தில் அமைதியானவராம். பாவ்யகலா தன்னுடைய சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே
பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.
என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. ஆனால் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப்போது கன்னடவாசி என்றும் சொல்லலாம். தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.


நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங்கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர்களிலும் நடித்து வருகிறேன்.
தமிழில் மெகா டிவியில் "சுற்றமும் நட்பும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதுதான் தமிழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து "ருத்ரா' தொடரில் குஷ்புவின் தங்கையாக நடித்துள்ளேன். அதன் பிறகு "கோலங்கள்' தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்றலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. "கஸ்தூரி' தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து "தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனின் கணவராக வரும் கலெக்டருக்கு முறைப் பெண்ணாகக் கிராமத்து வேடம் செய்கிறேன்.
"தென்றல்' தொடரில் எனக்கு முழு வில்லத்தனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல்தான். அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரிலும் நடக்கிறது. மென்மையான கதாபாத்திரத்தைவிட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னதான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக்கும்போது அந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம். எனவேதான் இதுமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறிவிட்டு மாமியாருடன் சண்டைக்கு தயாரானார் சுதா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget