"உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2' நிகழ்ச்சிக்கு வரும் கடிதங்களை விட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ரம்யாவுக்கு காதல் கடிதங்கள் அதிகமாக வருகிறதாம். காம்பயர் ஆக இருந்தாலும் அவருக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியமாம். "எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே.
கல்லூரியில் படிக்கும்போதே இரண்டு குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன்' என்கிறார் ரம்யா. காதல் கடிதங்கள் பற்றிக் கேட்டால் வெட்கத்தையே பதிலாகத் தருகிறார் ரம்யா.