We PDF Watermark Remover - PDF கோப்புக்களில் வாட்டர் மார்கினை அகற்றும் மென்பொருள்
கணணியில் பயன்படுத்தப்படும் எழுத்து கோப்பு வகைகளுள் PDF கோப்பானது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் அவற்றினை இலகுவாக பரிமாற்றம் செய்ய முடிவதுடன், அதில் மாற்றங்களை எழிதாக மேற்கொள்ள முடியாதவாறு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. எனினும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் PDF கோப்பின் கடவுச்சொற்களை நீக்குதல் பிரதி செய்தல் போன்ற வசதிகளை மேற்கொள்ளக் கூடிய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது PDF கோப்புக்களில் உருவாக்கப்படும் Watermark இனை அகற்ற கூடிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.