
பெரும்பாலும் நடிகைகள் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு சென்றால் அவசியம் உறவினர் யாரையாவது பாதுகாப்புக்காக உடன் அழைத்து செல்வார்கள். ஆனால் அனுஷ்கா அப்படி யாரையும் அழைத்து செல்வதில்லை. செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்குள் செல்லும்போதுகூட தனியொரு நடிகையாகத்தான் சென்றிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இரண்டாம் உலகம் மட்டுமின்றி, தாண்டவம் படப்பிடிப்புக்கு அமெரிக்கா சென்றபோதுகூட நான் தனியாகத்தான் சென்று வந்தேன். காரணம், இந்த யூனிட்டுகளை சேர்ந்த அனைவரும் என்னை ஒரு சகோதரியைப்போலவே நினைத்தார்கள். அவர்கள் பழகினதை வைத்துதான் தனியாக சென்றேன்.அதேபோல், இரண்டாம் உலகம் படத்துக்காக ஜார்ஜியா சென்றபோது 80 நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் தங்கியிருந்தோம். அங்கு நான் மட்டுமே பெண். ஆனால் அங்கிருந்த அத்தனை ஆண்களும் எனக்கு நல்ல செக்யூரிட்டி கொடுத்தார்கள். ரொம்ப அன்பாக நடந்து கொண்டார்கள் என்றும் செல்வராகவன் யூனிட்டுக்கு நற்சான்றிதழ் வாசிக்கிறார் அனுஷ்கா.