
பிரபுதேவாவின் உதவியாளர் ஷக்தி வசந்த பிரபு இயக்கும் படம் "ஏன் இந்த மயக்கம்". திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜீவ் குமார் ஹீரோ. மானாட மயிலாட புகழ் சொர்ணா ஹீரோயின். இவர்கள் தவிர ரித்தியா, விக்னேசா, டெல்லா என்ற மூன்று ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள். "இன்றைய இளைஞர்களின் மயக்கம் செல்போன் லேப்டாப் மீதுதான் இருக்கிறது. நல்ல விஷயத்துக்காக கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனமான இந்த இரண்டும் இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பதை சொல்லும் படம்.
இன்றைய காலத்துக்கு கண்டிப்பாக தேவையான மெசேஜ் சொல்லும் படம். நான் பிரபு தேவாவின் உதவியாளர் என்பதால் அவரது பாதிப்பு படத்தில் கட்டாயம் இருக்கும். இது பெற்றோர்களுக்கு பாடமாகவும் இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஷக்தி வசந்த் பிரபு.