விஸ்வரூபம் என் சினிமா கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படம் என்கிற ஆண்ட்ரியா மேலும், "கமல் சாருடன் நடிக்க, எனக்கு சான்ஸ் கிடைத்ததே பெரிய விஷயம். அதிலும், அவரே கதை, வசனம் எழுதி, டைரக்ஷன் செய்து, நடிக்கிற படத்தில், நானும் இருப்பதை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றும், பெருமையாக சொல்கிறார். இப்படத்தில் கமல் சாருடன் இணைந்து, நான் நடனமாடும் ஒரு பாடலுக்கு, பிர்ஜு மகாராஜ் ஜீ என்பவர், எனக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார்.
அப்பாடலில் கமலுடன் இணைந்து நடனமாடியது இனிமையான அனுபவமாக அமைந்தது. ஏனெனில், நடனத்தில் கமல் ஒரு ஜீனியஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் இணைந்து நடனமாடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரிய விஷயமல்லவா. படம் பார்க்கும்போது அந்த நடனம், ரசிகர்களுக்கு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார் ஆண்ட்ரியா.