உங்கள் மொபைலில் பேட்டரி ஆயுளை அதிகரிப்பது எப்படி


சாதாரண போன்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது. அனால் இந்த ஸ்மார்ட்போன்கள் எனப்படுகிற அதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் இருக்கே! அப்பப்பா...அதை வைத்திருப்பவருக்குத்தான் அதனுடைய அருமைதெரியும். ஆன்ட்ராய்டு போன்களை வாங்கிவிட்டு பலர் செல்போன் பேட்டரி நிக்கவே இல்லை என்றே புலம்புகின்றனர்.
இந்த சிக்கலை எளிதில் தீர்க்க முடியாதா? இதற்கு என்னதான் தீர்வு என்பதைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

வைஃபை: உங்களுடைய ஸ்மார்ட்போனில் Wifi வசதியிருந்தால் அதன் மேலொரு கண்ணை வைக்கவும்! ஏனினில் சில நேரங்களில் அதை அணைக்க மறந்தீர்கள் என்றால் செல்போன் பேட்டரி எளிதில் தீர்ந்துவிடும். எனவே கவனம் தேவை!

பேட்டரியை அவ்வப் பொழுது செக் செய்யவும்: உங்களுடைய செல்போன் பேட்டரி எளிதில் குறைகிறதென்றால் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள சிறப்புப் பகுதியை அடிக்கடி செக் செய்யவும்.

செட்டிங்க்ஸ் >>about phone >> பேட்டரி யூஸ் என்றவகையில் சென்று தகுந்த அளவை பெறலாம்.

சார்ஜரும் முக்கியம்: சில நேரங்களில் சார்ஜரும் சொதப்பும். எனவே சற்றே நல்ல சார்ஜரை வாங்கவும்...ஏனென்றால் சில நேரங்களில் உங்களுடைய போனின் பேட்டரி நிரம்பிவிட்டதாக காட்டிவிடும். இம்மாதிரி சிக்கல்கள் கார்களில் சார்ஜ போடுபவர்களுக்கு தெரியும்.

நீங்கள் 3ஜி பயன்படுத்துபவரா? : நீங்கள் 3ஜி வகையறா இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துபரானால், உங்கள் பேட்டரி எளிதில் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தேவையில்லாத நேரங்களில் 3ஜி சேவைகளை நிறுத்திவையுங்கள்

போனின் பிரைட்னஸ் : உங்களுடைய போனின் பிரைட்னஸ் அளவை குறைத்தாலும் பேட்டரியின் பயன்பாடு குறைவாகவே இருக்கும். அதிலும் பகல்வேளைகளில் பிரைட்னஸ் குறைவாக இருப்பதே நன்று!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்