கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


5. ஹரிதாஸ்

விமர்சகர்களால் பாரட்டப்பட்ட ஹரிதாஸ் அதன் தரத்துக்கேற்ற வசூலை பெறவில்லை என்பது இந்த வருடத்தின் சினிமா சோகங்களில் ஒன்று. சென்ற வார இறுதியில் 2.3 லட்சங்களையும், வார நாட்களில் 2.7 லட்சங்களையும் வசூலித்து இரண்டு வாரத்தில் 11.1 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் தோல்வி நமது ரசனையின் தோல்வி.

4. நான்காம் பிறை

வினயன் இயக்கியிருக்கும் இந்த ஹாரர் திரைப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 5.14 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. சந்தமாமா

கருணாஸ் நடித்திருக்கும் இந்த மிகச்சுமார் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 6.4 லட்சங்கள். 

2. விஸ்வரூபம்

நான்காவது வார இறுதியில் - மூன்று தினங்களில் 40.3 லட்சங்களை விஸ்வரூபம் வசூலித்துள்ளது. வார நாட்களில் வசூல் 35.7 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 11.3 கோடிகள்.

1. அமீரின் ஆதிபகவன்

முதலிடத்தில் அமீரின் ஆதிபகவன். சென்ற வார இறுதியில் 89.9 லட்சங்களையும் வார நாட்களில் ஒரு கோடியையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 3.3 கோடிகள்.66

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்