தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அனைத்தும் செய்யமுடியும் என்று அவ்வப்பொழுது நிரூபித்தவாறே இருக்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அதற்கு சான்றாக தற்பொழுது மனித மூளையைக்கூட கட்டுப்படுத்தும் வகையிலான சாதனங்கள் வந்துவிட்டது. இம்மாதிரி ஆச்சர்யமூட்டும் சாதனங்கள் வருங்காலத்தை மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சாதனங்கள் என்னசெய்கிறது மற்றும் எவையெல்லாம் இந்த வரிசையில் பார்க்கலாம்
ஏமொடிவ் EPOC : கீபோர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றை தினந்தோறும் பயன்படுத்தி அலுத்துவிட்டதா? இனி கவலைவேண்டாம். ஏமொடிவ் EPOC என்ற சாதனம் மனித மூளையின் மூலமாகவே கீபோர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
MUSE : மூஸ் - இதுவொரு அற்புதமான சாதனம். நீங்கள் ஏதாவது சவாலான வேலையை செய்வதற்கு முன்னர் இதை பயன்படுத்தினால், மூளையை நிதானப்படுத்தி வேலையை சுலபமாக செய்ய வழிவகுக்கிறது. மனித மூளையை ஆன்ட்ராய்டு போன்களால் கூட இதைவைத்து கட்டுப்படுத்தலாம்.
நியூரோஸ்கை மைண்ட்வேவ்: இந்த சாதனம் குழந்தைகளின் அறிவை வளரச்செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பான சாதனமாகும்.
பிரைன்டிரைவர் : இது ஒரு சிறந்த சாதனம். இதை ஏமொடிவ் EEG சாதனத்துடன் சேர்த்து பயன்படுத்தினால் காரைக் கூட மூளையால் கட்டுப்படுத்தமுடியும். கூகுளின் டிரைவர் இல்லாத கார் போன்ற வடிவில் இதுவும் உதவுமாம்.
டர்பாஸ் ப்ரோதேஷ்டிக் ஆர்ம்: ரோபோ படத்தில் தலைவர் பயன்படுத்திய கைகளைப் போன்ற வடிவில்தான் இந்த சாதனமும் உள்ளது. இது மனித மூளையுடன் இணைந்து சாதாரண கைகளைப் போலவே செயல்படுகிறதாம். மேலும் அதிகப்படுயான ஆற்றலும், செயல்திறனும் அதிகமாக இருக்கும்.