பவர் ஸ்டார் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தின் கதைதான் நீங்க மேலே படித்த, பவரு திருத்தினாரா, திருடினாரா. ஆமாம் பாஸ்... இதுதான் படத்தின் கதையே. திருட்டை தொழிலாகக் கொண்ட மூன்று
நண்பர்களுடன் சந்தர்ப்பவசத்தால் சீனிவாசனும் இணைந்து கொள்கிறார். சீனிவாசனுக்கு இவர்களின் தில்லாலங்கடி குணங்களில் ஒன்றுகூட இல்லை. இந்த கொழந்த மனசுக்காரர் இவர்களுடன் திருடினாரா இல்லை இந்த மூன்று பேரையும் திருத்தினாரா என்பது படத்தின் ஒன் லைன். படத்தின் பெயர் நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க.
கதையே இல்லாமல் வரும் காமா சோமாக்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டும் எப்படி இருக்கப் போகிறது? தெருத்தெருவாக பொதுவுடமை பிரச்சாரம் செய்த பாவலர் வரதராஜனின் மகன் ஜோவி இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது சின்ன அதிர்ச்சி. கொள்கைப் பிடிப்புள்ள தந்தையின் மகனுக்கு இப்படியொரு சப்ஜெக்டை எப்படி யோசிக்க முடிந்ததோ.
சரி, பாவலர் வரதராஜன் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன தகவல். இளையராஜாவின் மூத்த சகோதரர்தான் பாவலர் வரதராஜன். ஆர்மோனிய பெட்டியை தொட்டதற்காக ஸ்கேலால் புறங்கையில் அடித்தார் என்று இளையராஜா அடிக்கடி சொல்லும் அவரது அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன்தான் ஜோவி