தனுஸ்ரீ தத்தாவின் சகோதரி நேசம்


தனுஸ்ரீ தத்தாவை நினைவிருக்கிறதா? தீராத விளையாட்டு பிள்ளையில் தாதா பிரகாஷ்ரா‌ஜின் தங்கையாக நடித்த பேரழகி? சாமியாராகப் போகிறேன், தலையை மழித்துக் கொள்ளப் போகிறேன் என சில மாதங்கள் முன் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டரே...? ஓகே. அவர் தனது தங்கை இஷிதா தத்தாவையும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார். ஒரு சின்ன வித்தியாசம் அக்கா இயங்குவது பெ‌ரிய திரை என்றால் தங்கைக்கு சின்னத்திரை.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீ‌ரியலில் இஷிதா தத்தாதான் ஹீரோயின். சின்னத் திரைக்கு வந்ததைப் பற்றி கேட்டதற்கு, இதுதான் எல்லாம்னு நான் நினை‌க்கலை. என்னுடைய கிளாமர் உலகத்தை சின்னத் திரையில் தொடங்கியிருக்கிறேன். மற்றதெல்லாம் அதனதன்படி நடக்கும்ணு நினைக்கிறேன் என பதிலளித்திருக்கிறார்.

சினிமா ச‌ரியில்லை என்றுதான் தனுஸ்ரீ தத்தா சந்நியாசி முடிவை எடுத்தார், பிறகு அதனை விலக்கிக் கொண்டார் என்றெல்லாம் பேச்சிருக்கிறது. ஆனால் அவ‌ரின் தங்கைக்கோர் கீதத்தைப் பார்த்தால் அது உண்மையா என்ற சந்தேகமும் எழுகிறது. காரணம் இஷிதா தத்தா சின்னத் திரையில் நடிக்க ஆக்கமும் ஊக்கமும் தந்தவர் அக்கா தனுஸ்ரீதானாம்.

விரைவில் அக்காவுக்கு போட்டியாக தங்கை பெ‌ரிய திரைக்கு வருவதற்கான எல்லா வாய்ப்பும் அப்பட்டமாக‌த் தெ‌ரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்