டயாலிஸிஸ் எனப்படும் இரத்த‍ சுத்திகரிப்பு முறை பற்றி உங்களுக்கு தெரியுமா - வீடியோ இணைப்பு

விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப்ப‍வர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்களுக்குப் பிறகே அது செயலிழக்கிறது. இந்நிலையில் தான் ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலிஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை.
ஒரு நிமிடத்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளியே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின், தேவையற்ற அமிலங்கள், அதிகப்படியான நீர் பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரிக்காவிட்டால் அதிகப்படியான நீரால் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளும், ரத்தஅழுத்தம் கூடும். கால் வீக்கம் ஏற்படும். ஒரு சில நாட்களில் உயிரிழப்பும் ஏற்படும். எனவே ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, மாற்று உறுப்பு கிடைப்பது அரிதான நிலையில் டயாலிஸிஸ் கைகொடுக்கிறது.

அப்படி செய்ய‍ப்படும் ரத்த சுத்திகரிப்பு அதாவது டயாலிஸிஸ் செய்வதில் எத்தனை வகைகள் உள்ள‍ன என்றும் அவைகள் எப்ப‍டி செயல்படுத்த‍ப்படுகின்றன என்பதை அற்புதமாக வீடியோவில் பதி வேற்றியுள்ள‍னர். நீங்களும் கண்டு பயன்பெற‌லாம்

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget