
நடிகர் தனுஷ் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக சிவகார்த்திகேயன், நாயகிகளாக பிரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். வருகிற 1-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதில் தனுஷ் நயன்தாரா இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர்.
எதிர்நீச்சல் படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். டைரக்டர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கூறியதாவது:-
சாதாரண இளைஞன் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளே இந்த படம் நாயகன் மூன்று பெண்களை கடந்து போகிறான். ஒரு பெண் ஆசிரியை இன்னொரு பெண் விளையாட்டு வீராங்கனை. சிவகார்த்திகேயன் காமெடி மட்டுமன்றி எல்லா உணர்வுகளையும் கொட்டும் முழுமையான நடிகராக வருகிறார். சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை. பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல என்ற காதல் தோல்வி பாடல் படத்தில் உள்ளது.
இதில் காதலில் தோல்வி அடைந்தவரை ஆட வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி நயன்தாராவை அழைத்தோம். அவரும் சம்மதித்தார். தனுஷ், நயன்தாரா சேர்ந்து ஆட அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ஆடுவதற்கு நயன்தாரா சம்பளம் வாங்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறும் போது ஒரு நடிகரை வைத்து இன்னொரு நடிகர் படம் தயாரிப்பது பெரிய விஷயம். தனுஷ் என்னை வைத்து படம் எடுத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது என்றார்.