பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி?


தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்! 

• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.
கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். 

• ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம். 

• வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும். 

• மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும். 

• உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும். 

• டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget