குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க முடியும். 

ஆனால் ஏனைய பால்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே
உடல் நிறை அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயிலிருந்து தாய்மார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். 

குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். நீண்ட நாட்களுக்குத் தாய்ப்பால் கொடுத்து வந்தால் அழகு கெட்டு விடும் என்ற தவறான நம்பிக்கை பல பெண்களிடம் உள்ளது. 

அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதனால்தான், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.   

இதையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர். குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், தொடர்ந்து தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் அவருக்கு உயர் இரத்த அழுத்த நோயும் ஏற்படாது என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தால் தாய்-சேய் இருவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது உறுதி.

பழைய பதிவுகளை தேட